சாலைப்பணியாளர்கள் சங்கு ஊதி போராட்டம்

சாலைப்பணியாளர்கள் சங்கு ஊதி போராட்டம் நடத்தினர்.

Update: 2023-07-25 19:24 GMT

திருச்சி, டி.வி.எஸ்.டோல்கேட்டில் உள்ள கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கம் சார்பில் கருப்பு சட்டை அணிந்து, சங்கு ஊதியபடி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார். மலர்மன்னன் முன்னிலை வகித்தார். இதில் மாநில தலைவர் பாலசுப்பிரமணியன், பொதுச் செயலாளர் அம்சராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். போராட்டத்தில் சாலைப்பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டுள்ள கோட்டப் பொறியாளருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தகுதி வாய்ந்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். சாலைப் பணியாளர்களை மாற்றுப்பணிகளுக்கு பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்