சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-06-03 19:16 GMT

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தினர் திருச்சி டி.வி.எஸ். டோல்கேட்டில் உள்ள கோட்டப்பொறியாளர் அலுவலகத்தில் நேற்று மாலை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் சண்முகம் முன்னிலை வகித்தார். இதில் கோட்டத்தலைவர்கள் மலர்மன்னன், செல்வராஜ், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பழனிசாமி உள்பட பலர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். ஆர்ப்பாட்டத்தில், சாலைப் பணியாளர்களுக்கு 41 மாத பணி நீக்க காலத்தை, பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். ஊதியத்தில் 10 சதவீதம் ஆபத்துப்படி வழங்க வேண்டும். சாலைப்பணியாளர்களில் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு நெடுஞ்சாலைத்துறையிலேயே விரைந்து பணி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டம் தொடங்குவதற்கு முன்னதாக ஒடிசா ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்