சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு ஊர்வலம்

நாகை சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

Update: 2023-01-13 18:45 GMT

நாகை சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

சாலை பாதுகாப்பு வாரம்

தமிழகத்தில் ஜனவரி 11-ந்தேதியில் இருந்து 17-ந்தேதி தேதி வரை சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி நேற்று நாகை மாவட்ட நெடுஞ்சாலை துறை சார்பில் நாகை புதிய பஸ் நிலையம் அருகே அவுரித்திடலில் சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்துக்கு நாகை உதவி கோட்ட பொறியாளர் அய்யாதுரை தலைமை தாங்கினார். உதவி பொறியாளர் முருகானந்தம், பாரதிதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தலைக்கவசம்

ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் தலைக்கவசம் அணிய வேண்டும். மது போதையில் வாகனம் ஓட்டக்கூடாது. செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டக்கூடாது. நான்கு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கட்டாயம் சீட்டு பெல்ட் அணியவேண்டும்.

ஆஸ்பத்திரி, பள்ளி, கல்லூரி அருகே வாகனங்களை மெதுவாகவும் கவனமாகவும் ஓட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பினர். ஊர்வலம் முக்கிய சாலைகளின் வழியாக சென்று உதவி கலெக்டர் அலுவலகத்தை அடைந்தது. இதில் சாலை ஆய்வாளர்கள், சாலை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்