திருவிதாங்கோட்டில் ரூ.84 லட்சத்தில் சாலை சீரமைக்கும் பணி; அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்

திருவிதாங்கோட்டில் ரூ.84 லட்சத்தில் சாலை சீரமைக்கும் பணியை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.

Update: 2022-08-18 19:42 GMT

தக்கலை, 

திருவிதாங்கோட்டில் ரூ.84 லட்சத்தில் சாலை சீரமைக்கும் பணியை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.

சாலை சீரமைக்கும் பணி

திங்கள்நகர்-அழகியமண்டபம் சாலையில் வட்டம் முதல் திருவிதாங்கோடு புதுப்பள்ளி வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சாலை மிகவும் பழுதுபட்டு போக்குவரத்திற்கு சிரமத்தை ஏற்படுத்தி வந்தது. இதனை திருவிதாங்கோடு பேரூராட்சி தலைவர் நசீர், அமைச்சர் மனோதங்கராஜ் கவனத்திற்கு கொண்டு சென்றார். இதையடுத்து சாலையை சீரமைப்பதற்கு ரூ.84 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதைதொடர்ந்து நேற்று திருவிதாங்கோட்டில் சாலை சீரமைக்கும் பணியை அமைச்சர் மனோதங்கராஜ் தொடங்கி வைத்தார். இந்தநிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை உதவி என்ஜினீயர் தனேஷ், உதவி கோட்ட என்ஜினீயர் வென்ஸ், பேரூராட்சி தலைவர் நசீர், துணைத்தலைவர் சில்பர்ட் அமீர், தக்கலை ஒன்றிய செயலாளர் அருளானந்த ஜார்ஜ், பேரூர் துணைச்செயலாளர் செய்யதலி, மாவட்ட பிரதிநிதிகள் ராஜேந்திரராஜ், விக்னேஷ் மற்றும் நிர்வாகிகள் கபூர், குமரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்