சாலையில் ஏற்பட்ட பள்ளம் சீரமைப்பு

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

Update: 2022-08-27 15:52 GMT

'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

லாரி சிக்கியது

பொள்ளாச்சி-பல்லடம் ரோட்டில் சூடாமணி கூட்டுறவு சங்கம் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலை சீரமைக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த ரோட்டில் வந்து கொண்டு இருந்த ஒரு லாரியின் முன்பக்க டயர் திடீரென்று குடிநீர் குழாய் உடைப்பால் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் சிக்கி கொண்டது. இதனால் கிரேன் வரவழைக்கப்பட்டு லாரி மீட்கப்பட்டது.

இது குறித்து 'தினத்தந்தி'யில் நேற்று படத்துடன் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து பள்ளம் ஏற்பட்ட இடத்தை தோண்டி மீண்டும் குழாயை அதிகாரிகள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

சீரமைப்பு பணிகள்

இது குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், குடிநீர் குழாய் உடைந்ததால் சாலையின் உள்ளே அரிப்பு ஏற்பட்டு இருந்த நிலையில் லாரி வந்த போது திடீரென்று பள்ளம் உருவாகி உள்ளது. தற்போது பள்ளம் ஏற்பட்ட பகுதியில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றனர்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், பொள்ளாச்சி -பல்லடம் ரோட்டில் பள்ளம் ஏற்பட்டது குறித்து 'தினத்தந்தி'யில் செய்தி வெளியானதை தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் உடனடியாக குழாய் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர்.

இதற்காக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். குடிநீர் குழாயில் கசிவு ஏற்படுவதால் பள்ளம் உருவாகுவதை தடுக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்