விநாயகர் சிலைகள் கரைக்கும் பகுதியில் பாதை சீரமைப்பு
விநாயகர் சிலைகள் கரைக்கும் பகுதியில் பாதை சீரமைக்கப்பட்டது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு இடங்களில் வைக்கப்பட்ட சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட உள்ளது. அதன்படி வேலூரில் இன்று (வெள்ளிக்கிழமை) சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படுகிறது. வேலூர் ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு ஆற்காடு சாலை, சைதாப்பேட்டை மெயின் பஜார் உள்ளிட்ட பகுதிகளில் சென்று சதுப்பேரி ஏரியில் கரைக்கப்படும். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சதுப்பேரி ஏரி பகுதியில் சிலை வரும் பாதைகள் பொக்லைன் எந்திரம் மூலம் சீரமைக்கப்பட்டுள்ளது. ஒரு பகுதியின் வழியாக வாகனம் உள்ளே சென்று மற்றொரு பாதை வழியாக வாகனம் வெளியே செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.