கோவில்பட்டியில் ரூ.8 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி தொடக்கம்
கோவில்பட்டியில் ரூ.8 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி லட்சுமி மில் மேல காலனியில் மாவட்ட பஞ்சாயத்து நிதி ரூ.8 லட்சம் செலவில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த பணியை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து இனாம் மணியாச்சி பஞ்சாயத்து சீனிவாசன் நகர் ரேஷன் கடை தெருவில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.4 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலையை கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் துணைத்தலைவர் பழனிச்சாமி, பஞ்சாயத்து துணைத்தலைவர் ரேவதி, மாவட்ட பஞ்சாயத்து முன்னாள் தலைவர் சத்யா, பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.