திருப்பூர்
ெஹல்மெட் அணியாததற்கு அபாரதம் விதித்ததால் திருப்பூரில் போலீசாரை கண்டித்து விவசாயிகள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வாக்குவாதம்
திருப்பூர் தாராபுரம் ரோடு சந்திராபுரம் பிரிவு அருகே நேற்றுமுன்தினம் அதிகாலை தெற்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவினாசிபாளையத்தில் இருந்து காய்கறிகளை வேனில் ஏற்றிக்கொண்டு தென்னம்பாளையம் உழவர் சந்தைக்கு விவசாயிகள் புறப்பட்டு வந்தனர். வேனுக்கு முன்பு விவசாயி சந்துரு என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார்.
சோதனை சாவடி அருகே வந்ததும், அவரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். ெஹல்மெட் அணியாததற்கு அபாரதம் விதிக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளின் நம்பர் பிளேட்டில் 'தமிழன்' என்று குறிப்பிட்டு இருந்ததால், அதற்கும் போலீசார் அபராதம் விதித்தனர். அதற்கு சந்துரு, காவலரின் இருசக்கர வாகனத்தில் 'போலீஸ்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அனைவருக்கும் சட்டம் சமம் என்று கூறியதாக தெரிகிறது. இதில் போலீசாருக்கும், சந்துருவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ேபாலீஸ்காரர்வாகனத்துக்கும் அபராதம்
பின்னர் போலீசார் அவரை தாக்கியதுடன், அபராதம் விதித்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து அனுப்பி வைத்தனர். அபராதம் செலுத்திய பிறகும் மோட்டார் சைக்கிளை போலீசார் கொடுக்காமல் இருந்ததாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி மற்றும் விவசாயிகள் சந்திராபுரம் பிரிவு சோதனை சாவடி முன் தாராபுரம் ரோட்டில் திடீர் மறியலில் நேற்று காலை ஈடுபட்டனர். பின்னர் போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தி தெற்கு போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர். இதனால் தாராபுரம் ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விவசாயிகளிடம் தெற்கு போலீஸ் உதவி கமிஷனர் கார்த்திகேயன் பேச்சுவார்த்தை நடத்தினார். காவலரின் இருசக்கர வாகனத்தில் ''போலீஸ்' என்று எழுதியதற்கும் அபராதம் விதிக்கப்பட்டது. அதன்பிறகு சமாதானப்படுத்தி விவசாயிகளை அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.