நில உரிமையாளரை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்

நகராட்சியில் இருந்்து உலராத உரக்கழிவுகளை வயலில் கொண்டு வந்து கொட்டிய நில உரிமையாளரை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-09-07 16:37 GMT

தாராபுரம்

நகராட்சியில் இருந்்து உலராத உரக்கழிவுகளை வயலில் கொண்டு வந்து கொட்டிய நில உரிமையாளரை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

தாராபுரம் நகராட்சி சார்பில் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் எனப்பிரித்து நுண்ணுயிர் உரமாக தயாரித்து வருகின்றனர். அதனை நகராட்சி நிர்வாகம் டெண்டர் கோரப்பட்டு அதன் மூலம் அவர்கள் உரத்தை விற்பனை செய்துவருவது வழக்கம். அந்த வகையில் அவர்கள் உரம் கேட்கும் நபர்களின் காடு மற்றும் தோட்டங்களுக்கு உயிர் உரமாக விற்பனை செய்து வருகின்றனர். அந்த வகையில் உப்புத்துறை பாளையத்தை சேர்ந்த ஒரு தோட்ட உரிமையாளர் நுண் உயிர் உரம் கேட்டதால் நகராட்சி டெண்டர் உரிமையாளர் அவர் இடத்தில் உலராத ஈரப்பதத்துடன் உள்ள நுண் நுண்ணுயிர் உரக்கழிவுகளை லாரி மூலம் கொண்டு வந்து கொட்டினார். இதனால் நுண் உரக்கழிவுகள் துர்நாற்றம் வீச தொடங்கியது. இதனால் அப்பகுதியில் குடியிருப்பு வாசிகள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வாந்தி எடுத்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உதவியுடன் கழிவுகளை அப்புறப்படுத்த கோரி 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நகராட்சி தலைவர் பேச்சுவார்த்தை

சாலைமறியல் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி தலைவர் கு.பாப்புகண்ணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார், விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னாள் மாவட்ட செயலாளர் தமிழ்முத்து, நகர செயலாளர் செந்தில்குமார் மற்றும் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது நகராட்சி தலைவர் நில உரிமையாளரிடம் மக்களை பாதிக்கும் இடத்தில் இது போன்ற உலராத நுண் உரங்களை கொட்டும்போது குடியிருப்பு வாசிகள் மனதில் கொண்டு செய்திருக்க வேண்டும். இதனை உடனடியாக அப்புறப்படுத்த நகராட்சி பணியாளர்களுக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து நில உரிமையாளர் அவற்றை அப்புறப்படுத்த ஒப்புக்கொண்டார். இதனையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்