பஸ் மோதி வாலிபர் பலி

திருவையாறு அருகே பஸ் மோதி வாலிபர் இறந்தார்.

Update: 2022-09-02 19:52 GMT

திருவையாறு;
திருவையாறு அருகே பஸ் மோதி வாலிபர் இறந்தார். அண்ணன் திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுக்க சென்ற போது நிகழ்ந்த இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு

பஸ் மோதியது

திருவையாறு அருகே உள்ள நடுக்காவேரி பாசாரை சேர்ந்த அந்தோணிசாமி மகன் முயேஸ் (வயது32). இவருடைய தம்பி யூகன்(29). இவர்கள் இருவரும் நேற்று மோட்டார் சைக்கிளில் திருமண பத்திரிக்கை கொடுக்க கண்டியூருக்கு வந்தனர். பின்னர் கண்டியூரிலிருந்து நடுக்காவேரி சென்றுகொண்டிருந்தனர். நடுக்காவேரி அருகே இவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு பேசிக்கொண்டிருந்தனர். அப்போது கண்டியூரிலிருந்து திருக்காட்டுப்பள்ளி நோக்கி சென்ற அரசு பஸ் எதிர்பாராதவிதமாக யூகன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த யூகன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

திருமணம்

இது குறித்து நடுக்காவேரி போலீஸ் நிலையத்தில் யூகன் அண்ணன் முயேஸ் புகார் செய்தார். இதன்பேரில் நடுக்காவேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.வருகிற 9-ம் தேதி(வெள்ளிக்கிழமை) யூகன் அண்ணன் முயேசுக்கு திருமணம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் யூகன் விபத்தில் இறந்த சம்பவம் அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்