நாற்று நடும் போராட்டம் எதிரொலிஅதியமான்கோட்டையில் சேதமடைந்த சாலை சீரமைப்பு

Update: 2023-07-27 19:00 GMT

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி அருகே அதியமான்கோட்டையில் பைபாஸ் சந்திப்பு சாலை முதல் உடையார் தெரு வரை உள்ள மாநில நெடுஞ்சாலைத்துறை பிரிவு கட்டுப்பாட்டில் உள்ள தார்சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக மாறி ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கிடந்தது. இதனால் மழைக்கு சாலைகளில் உள்ள பள்ளங்களில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறியது.

இந்த சாலையை தார்சாலையாக மாற்றி தரக்கோரி பலமுறை அப்பகுதி மக்கள் தரப்பில் கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவிலை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அதியமான்கோட்டை பகுதியில் சேரும் சகதியுமாக மாறியிருந்த சாலையில் நாற்றுநட்டு நேற்று முன்தினம் நூதன போராட்டம் நடத்தினர்.

இதன் எதிரொலியாக நேற்று அதியமான்கோட்டை பைபாஸ் சந்திப்பு சாலை முதல் உடையார் தெருவரை முதற்கட்டமாக பழுதான தார்சாலைக்கு நுரம்பு மண் கொட்டி பொக்லைன் எந்திரம் மற்றும் ரோலர் மூலம் சமன்செய்து சாலை சீரமைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்