குப்பை கழிவுகளால் மாசுபடும் ஆற்று நீர்

பொன்னானியில் குப்பை கழிவுகளால் ஆற்று நீர் மாசுபட்டு வருகிறது. மேலும் நோய் பரவும் அபாயம் நிலவுகிறது.

Update: 2023-05-20 19:45 GMT

பந்தலூர்

பொன்னானியில் குப்பை கழிவுகளால் ஆற்று நீர் மாசுபட்டு வருகிறது. மேலும் நோய் பரவும் அபாயம் நிலவுகிறது.

குவிந்து கிடக்கும் குப்பைகள்

பந்தலூர் அருகே உள்ள பொன்னானியில் ஆறு ஓடுகிறது. இந்த ஆற்று நீரை ஆதாரமாக கொண்டு அம்பலமூலா அருகே உள்ள வட்டக்கொல்லி என்ற இடத்தில் நெலாக்கோட்டை ஊராட்சி சார்பில் குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.

இந்த குடிநீர் திட்டத்தின் கீழ் பல கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான மக்கள் பயன் அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் பொன்னானி ஆற்றங்கரையில் பிளாஸ்டிக் பொருட்கள் உள்பட குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அங்கு குப்பைகள் குவிந்து கிடக்கிறது.

தடுக்க வேண்டும்

இந்த குப்பைகள் ஆற்றில் கலக்கிறது. இதனால் ஆற்று நீர் மாசுபடுகிறது. மேலும் அந்த நீரை குடிநீராக குடிக்கும் மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது.

இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது:-

எங்கள் பகுதியில் உள்ள ஆற்றில் சிலர் குப்பைகளையும், இறைச்சி கழிவுகளையும் கொட்டுகின்றனர். மேலும் கழிவுநீரும் விடப்படுகிறது. இதை தடுக்க வேண்டும் என்று பலமுறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

அந்த நீரை குடிக்கும் மக்களுக்கு நோய் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே குப்பைகள், இறைச்சி கழிவுகள் மற்றும் கழிவுநீர் ஆற்றில் கலப்பதை தடுக்க வேண்டும். மேலும் அங்கு குப்பை தொட்டி வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்