கோத்தகிரி அருகே பழுதடைந்த சாலையால் வாகன விபத்து அபாயம்- தார்சாலை அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

கோத்தகிரி அருகே பழுதடைந்த சாலையால் வாகன விபத்து அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதனால் தார்சாலை அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனார்.

Update: 2022-10-06 18:45 GMT

கோத்தகிரி

கோத்தகிரி அருகே பழுதடைந்த சாலையால் வாகன விபத்து அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதனால் தார்சாலை அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனார்.

பழுதான சாலை

கோத்தகிரி கூக்கல்தொரை அருகே அம்மன் நகர் கிராமத்தில் சுமார் 25 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு செல்ல அமைக்கப்பட்டுள்ள தார்சாலை முழுவதும் பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. மேலும் இந்த சாலையின் இருபுறங்களிலும் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து வன விலங்குகளின் இருப்பிடமாக மாறி உள்ளது. இதனால் இந்த கிராமத்தில் இருந்து பணிக்கு செல்லும் தொழிலாளர்கள், பள்ளிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் ஆகியோர் பழுதடைந்த சாலை வழியாக சிரமத்துடன் நடந்து சென்று வருகின்றனர்.

கோரிக்கை

மேலும் நோயாளிகளை அவசர தேவைக்கு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. மேலும் அவ்வப்போது விபத்துகளும் நடக்கிறது. எனவே பழுதடைந்த தார் சாலையைப் புதுப்பிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதுடன், சாலையோரம் வளர்ந்துள்ள புதர் செடிகளை வெட்டி அகற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்