சேத்துமடையில் குறுகிய அளவில் தடுப்புச்சுவர் கட்டுவதால் விபத்துகள் அதிகரிக்கும் அபாயம்- உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

சேத்துமடையில் குறுகிய அளவில் தடுப்புச்சுவர் கட்டுவதால் விபத்துகள் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. அதனால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளார்கள்.

Update: 2022-11-24 18:45 GMT

ஆனைமலை

சேத்துமடையில் குறுகிய அளவில் தடுப்புச்சுவர் கட்டுவதால் விபத்துகள் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. அதனால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளார்கள்.

அடிப்படை வசதிகள் இல்லை

ஆனைமலை அடுத்த வேட்டைக்காரன் புதூர் பேரூராட்சியில் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் பேரூராட்சி அலுவலகத்தில் வேட்டைக்காரன் புதூரில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை என பொதுமக்கள் புகார் மனு கொடுத்ததோடு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

பேரூராட்சிக்கு உட்பட்ட பல பகுதியில் சாக்கடை கால்வாய் உடைந்து உள்ளது. அதனால் சாக்கடை கழிவுநீர் சீராக செல்லாததோடு, தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா போன்ற வைரல் காய்ச்சல் பரவ வாய்ப்பு உள்ளது. மேலும் காளியம்மன் கோவில் செல்லும் சாலையில் மேல்நிலைத் தொட்டி முறையாக சுத்தம் செய்யாமல் மேல்நிலைத் தொட்டி நிரம்பி வழிகின்றன.

குறுகிய தடுப்புச்சுவர்

கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தில் தண்ணீர் தேங்கி கட்டிடம் சிதிலமடைந்து காணப்படுகிறது. சேத்துமடை பகுதியில் மக்களிடம் இருந்து பெறப்படும் குப்பைகளை முறையாக அகற்றப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சேத்துமடை செல்லும் வழியில் மண் சரிவை கட்டுப்படுத்த தடுப்புச்சுவர் தற்போது மிகக் குறுகிய அளவு கட்டப்படுவதால் அடிக்கடி அப்பகுதியில் விபத்துகள் அடிக்கடி ஏற்படுகிறது. இதனை தடுக்க தடுப்புச்சுவரை 6 அடி உயரத்துக்கு கட்ட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்