புரட்சி பாரதம் கட்சி போராட்டம்
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் புரட்சி பாரதம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் துணை வட்டார வளர்ச்சி அலுவலரான மூர்த்தி என்பவரை பணி நீக்கம் செய்தது மற்றும் மேற்கு ஆரணி அரையாளம் ஊராட்சி செயலாளர் வேறு ஊராட்சிக்கு பணி மாறுதல் செய்ததைக் கண்டித்து புரட்சி பாரதம் கட்சி சார்பில் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் போராட்டம் நடந்தது.
போராட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைந்த அமைப்பாளர் அரையாளம் தாஸ் தலைமை தாங்கினார். இதில் 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். அப்போது அவர்களிடம் திருவண்ணாமலை கிழக்குப் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் எங்களது கோரிக்கை மனுவை கலெக்டர் பெற்று கொண்டால் தான் கலைந்து செல்வோம், என்றனர்.
இதையடுத்து அவர்களை திருவண்ணாமலை தாலுகா அலுவகத்தில் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் அவர்கள் கலெக்டரை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினர்.