மணிப்பூரில் பழங்குடியினர் பெண்களுக்கு நடந்த பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், அங்கு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய நீதி, பாதுகாப்பு வேண்டியும் புரட்சி பாரதம் கட்சி சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர் மாவட்ட செயலாளர் பிரபு தலைமை தாங்கினார். இதில் மாவட்ட தலைவர் கருப்புசாமி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்தும், அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக வசூலிக்கும் தனியார் பள்ளிக்கூடங்களை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.