வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம்
7 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகள் ெதாடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
7 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகள் ெதாடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
ஆய்வு கூட்டம்
விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் சிறப்பு சுருக்க திருத்தம் 2023 வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகள் தொடர்பாக ஆய்வு கூட்டம் கலெக்டர் மேகநாத ரெட்டி முன்னிலையில் நடந்தது. வாக்காளர் பட்டியல் பார்வையாளர் கூடுதல் ஆணைய (நில சீர்திருத்தம்) சாந்தா தலைமை தாங்கினார்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் சிறப்பு சுருக்க திருத்த நடவடிக்கைகள் வரும் ஜனவரி 1-ந் தேதியினை தகுதி நாளாக கொண்டு 8.11.2022 முதல் நடைபெற்று வருகிறது.
இறுதி வாக்காளர் பட்டியல்
சிறப்பு சுருக்க திருத்தத்தின் போது சேர்த்தல், நீக்கம், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்ய 8.11.2022 முதல் 8.12.2022 வரையில் விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அமைவிட மையங்கள், வட்ட கோட்ட நகராட்சி மற்றும் கலெக்டர் அலுவலகங்களில் தரப்பட்ட விண்ணப்பங்கள் உரிய கள விசாரணைக்கு பின் முடிவு செய்யப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் வருகிற 5-ந் தேதி வெளியிடப்பட உள்ளது.
ஆலோசனை கூட்டத்தில் குறையற்ற வாக்காளர் பட்டியல், இறந்த வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் நீக்கம் செய்தல், தேசிய வாக்காளர் தினம் கொண்டாடுதல், இளம் வாக்காளர்களை ஊக்கப்படுத்துதல் மற்றும் வாக்காளர்களின் கோரிக்கைகள் முறையிடுவோர் குறித்து பதிவேடுகள் பராமரித்தல் உள்ளிட்ட விவரங்கள் குறித்து வாக்காளர் பட்டியல் பார்வையாளர் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனை வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.