திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம்

திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-04-21 19:12 GMT

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று ஊரக வளர்ச்சி துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகளின் பணி முன்னேற்றம் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சி துறையின் மூலம் ஊராட்சி ஒன்றிய அளவில் நடைபெற்று வரும் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித்திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகள், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் -உள்ளிட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்தும், 15-வது நிதி குழு மானியத் திட்டத்தில் நடைபெற்று வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்தும், முதல்-அமைச்சரின் பள்ளிகள் மேம்பாட்டு திட்டத்தில் கூடுதல் பள்ளி கட்டிடங்களை கட்டுவது குறித்தும் அறிவுறுத்தப்பட்டது. மேலும் பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை புனரமைப்பது குறித்தும், புதிய வகுப்பறை கட்டிடம் கட்டுவது குறித்தும், பள்ளிகளில் புதிய சமையல் அறைக்கூடம் கட்டுதல், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் நிலுவையில் உள்ள வீடுகளை விரைந்து முடித்திடவும், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் கணக்கெடுக்கும் பணிகள் குறித்தும், புதிய சாலைப்பணிகள் குறித்தும், ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் நடைபெற்று வரும் அங்கன்வாடி கட்டிடம், ஊராட்சி மன்ற கட்டிடம், நிலுவையில் உள்ள பல்வேறு திட்டப்பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்