அரசு ஊழியர்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் அரசாணையை திரும்பப்பெறவேண்டும் - சசிகலா

அரசு ஊழியர்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் அரசாணையை திரும்பப்பெறவேண்டும் என சசிகலா கூறியுள்ளார்.

Update: 2022-11-09 10:47 GMT

சென்னை,

சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணி இடங்களை நிரப்புகிற பொறுப்பை தனியாரிடம் ஒப்படைக்கும் வகையில் மனிதவள மேலாண்மைத்துறையின் அரசாணை 115-ஐ தி.மு.க. தலைமையிலான அரசு வெளியிட்டு இருப்பது மிகவும் அதிர்ச்சியை அளிக்கிறது. இது யாராலும் ஏற்றுக்கொள்ளமுடியாதது. மிகவும் கண்டனத்துக்குரியது. நம் வருங்கால நம்பிக்கை நட்சத்திரங்களாக விளங்குகின்ற இளம் சமுதாயத்தினரின் அரசு வேலை என்ற கனவை தகர்க்கும் விதமாக தி.மு.க. ஆட்சியாளர்களின் இந்த முடிவு வருங்கால சந்ததியினருக்கு பெரும் பாதகத்தை ஏற்படுத்தும்.

எனவே அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கின்ற வகையிலும், இளம் சமுதாயத்தினரின் அரசு வேலை என்பதை எட்டாக்கனியாக மாற்றுகின்ற விதமாகவும், தி.மு.க. அரசு கொண்டுவந்துள்ள மனிதவள மேலாண்மைத்துறையின் அரசாணை எண் 115-ஐ உடனே திரும்பப்பெறவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்