ஓய்வுபெற்ற ஆசிரியர் சங்க கூட்டம்
மயிலாடுதுறையில், ஓய்வுபெற்ற ஆசிரியர் சங்கத்தின் கூட்டம் நடந்தது.
மயிலாடுதுறையில், ஓய்வுபெற்ற ஆசிரியர் சங்கத்தின் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சங்கத் தலைவர் முருகையன் தலைமை தாங்கினார். கவுரவத் தலைவர் டி.எஸ்.தியாகராஜன் முன்னிலை வகித்தார். இணை செயலாளர் கண்ணன் வரவேற்று பேசினார். இதில் தருமபுர ஆதீனம் கலைக் கல்லூரி செயலாளர் செல்வநாயகம் கலந்துகொண்டு 80 வயது கடந்த ஆசிரியர்களை வாழ்த்தி பேசினார். விழாவை ஆசிரியர் செல்வகுமார் தொகுத்து வழங்கினார். இதில் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் மதியழகன், தேசிய நல்லாசிரியர்கள் தாயுமானவன், மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். முடிவில் பொருளாளர் தியாகராஜன் நன்றி கூறினார்.