ஓய்வுபெற்ற நிலஅளவை அலுவலர்கள் சங்க கூட்டம்
ஓய்வுபெற்ற நிலஅளவை அலுவலர்கள் சங்க கூட்டம் நடந்தது.
விழுப்புரம்:
தமிழ்நாடு ஓய்வுபெற்ற நிலஅளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் மாநில செயற்குழு கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் ராமசுப்பு தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். மாநில பொதுச்செயலாளர் நந்தகோபால் முன்னிலை வகித்தார். இதில் மண்டல துணைத்தலைவர்கள் சண்முகய்யா, வரதராஜன், ராஜேந்திரன், சத்தியமூர்த்தி, அமைப்பு செயலாளர் சுந்தரமூர்த்தி, துணை பொதுச்செயலாளர் பரூக், விழுப்புரம் மாவட்ட செயலாளர் சாம்பசிவம், தலைவர் நாகலிங்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில், தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற அலுவலர்களுக்கு ஓய்வூதியம் 50 சதவீதம் ஏற்கனவே வழங்கப்பட்ட நிலையில் மீதமுள்ள 50 சதவீத ஓய்வூதியத்தையும் விரைந்து வழங்க வேண்டும், 70 வயது பூர்த்தியடைந்தவர்களுக்கு 10 சதவீத கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தின் முடிவில் மாநில பொருளாளர் ராமலிங்கம் நன்றி கூறினார்.