ஓய்வு பெற்ற காவல்துறை அலுவலர் சங்க கூட்டம்

ஓய்வு பெற்ற காவல்துறை அலுவலர் சங்க கூட்டம் நடந்தது.

Update: 2022-09-04 17:44 GMT

கரூர் மாவட்ட ஓய்வு பெற்ற காவல்துறை அலுவலர் நலச்சங்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கந்தசாமி தலைமை தாங்கினார். செயலாளர் கிருஷ்ணன், துணைச் செயலாளர் ரெங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஓய்வு பெற்ற காவலர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும், மருத்துவ படியாக வழங்கப்படும் ரூ.300-யை உயர்த்தி ரூ.ஆயிரமாக வழங்க வேண்டும், இந்து கோவில்களில் இரவு அலுவல் பணியில் இருக்கும் ஓய்வு பெற்ற காவலர்களுக்கு மாதம் ரூ.6,500 வழங்குவதை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், பொருளாளர் வேலுச்சாமி உள்பட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்