ஓய்வு பெற்ற அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

ஓய்வு பெற்ற அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-06-14 20:21 GMT

பெரம்பலூர்:

பெரம்பலூரில் மாவட்ட ஓய்வுபெற்ற அலுவலர் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் தங்கராசு தலைமை தாங்கினார். ஓய்வுபெற்ற அலுவலர்களுக்கு 1.1.2022 முதல் வழங்க வேண்டிய அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும். 70 வயது நிரம்பியவர்களுக்கு 10 சதவீதம் ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அனைவரும் பயன்பெறும் வகையில் திருத்தி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சங்கத்தின் புரவலர் தேவராஜன் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்