கட்டுமான நிறுவனத்திற்கு எதிரான மோசடி புகார் - மத்தியஸ்தம் செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி கிருபாகரன் நியமனம்

கட்டுமான நிறுவனத்திற்கு எதிரான மோசடி புகாரில் மத்தியஸ்தம் செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி கிருபாகரனை நியமித்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-08-30 18:36 GMT

சென்னை,

சென்னையை அடுத்த கழிப்பட்டூர் கிராமத்தில் தனியார் கட்டுமான நிறுவனம் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டியுள்ளது. இதில் குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்து தருவதாக சுமார் 6 கோடி ரூபாய் வரை வசூலிக்கப்பட்ட நிலையில், பணம் கொடுத்தவர்களிடம் குடியிருப்புகளை ஒப்படைக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது கட்டுமான நிறுவனம் தரப்பில் சமரசம் செய்ய வாய்ப்பளிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், ஓய்வுபெற்ற நீதிபதி கிருபாகரனை மத்தியஸ்தராக நியமித்து, ஒரு மாதத்தில் மத்தியஸ்தம் செய்து முடிவெடுக்க அறிவுறுத்தியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்