தூத்துக்குடியில் அரசு போக்குவரத்து கழகஓய்வு பெற்ற ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடியில் அரசு போக்குவரத்து கழகஓய்வு பெற்ற ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்ட அரசு போக்குவரத்து கழக ஒய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் தூத்துக்குடி மண்டல அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கிளை செயலாளர் பெலிக்ஸ் தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர் எட்டப்பன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநில உதவி செயலளார் சிவதானு கலந்து கொண்டு பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் திருச்செந்தூரில் ஓய்வு பெற்றோர் நல அமைப்பு உறுப்பினரை அவமரியாதை செய்த அரசு பஸ் கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட உதவி தலைவர் தாஸ், நிர்வாக குழு உறுப்பினர்கள் தானுமலையான், செல்வம், பொருளாளர் சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கிளை செயலாளர் மதுசேகர் நன்றி கூறினார்.