ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் தண்டவாளத்தில் படுத்து தற்கொலை

ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-10-16 22:26 GMT

மணப்பாறை:

ஓய்வு பெற்ற வங்கி மேலாளர்

மணப்பாறையில் உள்ள திண்டுக்கல் சாலை ரெயில்வே மேம்பாலம் அருகே பூமாலைபட்டி பின் பகுதியில் உள்ள ெரயில்வே தண்டவாளத்தில் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக திருச்சி ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையை நடத்தினர்.

அப்போது இறந்தவரின் பேண்ட் மற்றும் சட்டை பையில் 2 காகிதங்கள் இருந்தன. அதில் அவரின் முகவரி மற்றும் உறவினர்கள், நண்பர்கள் சிலரின் செல்போன் எண்களும் இருந்தது. இதையடுத்து அந்த எண்களுக்கு போலீசார் தொடர்பு கொண்டு விசாரித்தபோது இறந்தவர் மணப்பாறை இந்திரா நகரை சேர்ந்த செல்வம்(வயது 67) என்பதும், இவர் தனியார் வங்கியில் மேலாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் என்பதும் தெரியவந்தது.

தண்டவாளத்தில் படுத்து தற்கொலை

இதையடுத்து தலை மற்றும் உடல் துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்த செல்வத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.

முதல்கட்ட விசாரணையில், உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த செல்வம் மன உளைச்சலில் இருந்ததால் ரயில்வே தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்து கொண்டது, தெரியவந்தாக கூறப்படுகிறது.

ரெயிலை நிறுத்தி தகவல்

இதற்கிடையே நேற்று மாலை மதுரையில் இருந்து சென்னை சென்ற தேஜாஸ் அதிவிரைவு ரெயில் வந்தவர்கள், அந்த ரெயிலை மணப்பாறை ரெயில் நிலையத்தில் நிறுத்தி, அந்த சம்பவம் குறித்து தகவல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தபின்னர், ரெயில் புறப்பட்டு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்