பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்திய உணவகத்திற்கு அபராதம்

பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்திய உணவகத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2022-09-23 18:58 GMT

புகழூர் நகராட்சி துப்புரவு அலுவலர் ரவீந்திரன் தலைமையிலான பணியாளர்கள் மற்றும் போலீசார் கொண்ட குழுவினர் புகழூர் ஹை ஸ்கூல் மேடு பகுதியில் செயல்பட்டு வரும் ஓட்டல்களில் பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தப்படுகிறதா என திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள ஒரு உணவகத்தில் பிளாஸ்டிக் கவர்களில் பொட்டலங்கள் போட்டு கொடுக்கப்படுவதாக கிடைத்த தகவலின்படி அந்த உணவகத்தில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு 5 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் கவர்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர். மேலும் பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தினால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்