தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தீர்மானம்
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் கொங்கு நண்பர்கள் சங்க பொதுக்குழுவில் தீர்மானம்;
கரூர் மாவட்ட கொங்கு நண்பர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் கொங்கு மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் தலைவர் ஆடிட்டர் நல்லசாமி தலைமை தாங்கி, கொங்கு நண்பர்கள் சங்கம் சார்பில் புதிதாக கட்டி வரும் கட்டிடத்திற்கு நிதி வழங்கியவர்களை பாராட்டி பேசினார். செயலாளர் செல்லத்துரை வரவேற்று பேசினார்.மண்டல கமிஷன் பரிந்துரையின்படி ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கும் வருமான வரம்பை ஓ.பி.சி. பிரிவினருக்கு உயர்த்த வேண்டும், எல்லா சமூகத்திற்கும் சமநீதி வழங்க வேண்டும் எனில், பீகார் மாநிலத்தை போன்று தமிழகத்திலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இதில், கரூர் மாவட்ட கொங்கு நண்பர்கள் சங்க பொருளாளர் பாலசுப்பிரமணியன், துணைத்தலைவர்கள் பொன்னுசாமி, மணிராம், துணைச் செயலாளர்கள் பொன்னுசாமி, கார்வேந்தன், சங்க உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.