அரசு பஸ் வழித்தடத்தை மாற்றி அமைத்த அமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்

காரியாபட்டி 10-வது வார்டு பகுதி சபை கூட்டத்தில் அரசு பஸ் வழித்தடத்தை மாற்றி அமைத்த அமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2022-11-03 18:53 GMT

காரியாபட்டி, 

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்கவும், அமைச்சர் தங்கம் தென்னரசு வழிகாட்டுதலின்படி காரியாபட்டி பேரூராட்சியில் பகுதி சபை கூட்டம் 15 வார்டுகளிலும் நடைபெற்றது.

இதில் வார்டு எண் 10-ல் பேரூராட்சி தலைவர் செந்தில் தலைமையில் பகுதி சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மதுரை மண்டல பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் சுரேஷ்குமார், பேரூராட்சி செயல் அலுவலர் ஸ்ரீரவிக்குமார், இளநிலை பொறியாளர் கணேசன் மற்றும் 100-க்கும் மேற்பட்ட அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அப்பகுதி மக்கள் தங்கள் பகுதி குறைகளை தெரிவித்தனர்.

கூட்டத்தில் காரியாபட்டி 10-வது வார்டு பகுதியில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான என்.ஜி.ஓ நகர், எழில் நகர் ஆகிய பகுதிகளில் ரூ.1½ கோடி மதிப்பீட்டில் புதிதாக பேவர்பிளாக் சாலையும், 10-வது வார்டில் ரூ.1 கோடியே 36 லட்சம் மதிப்பீட்டில் மின் மயானம், என்.ஜி.ஓ நகர், எழில்நகர், சிலோன் காலனி பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான காரியாபட்டி - பெரியார் நிலையம் செல்லும் பஸ்சை முக்கு ரோடு, என்,ஜி.ஓ.நகர், சிலோன் காலனி வழியாக புதிய வழித்தடத்தை ஏற்படுத்தி கொடுத்த தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த கூட்டத்தில் நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் மனோஜ் பிரபாகர், கவுன்சிலர் சங்கரேஸ்வரன் வார்டு செயலாளர் சக்திவேல், மகேந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

=======

Tags:    

மேலும் செய்திகள்