பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து மாவட்ட ஊராட்சியில் தீர்மானம்

தேனி மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில் தேனிக்கு ெரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

Update: 2022-06-07 17:21 GMT

தேனி மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் மாவட்ட ஊராட்சி அலுவலக கூட்டரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பிரிதா தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ராஜபாண்டியன் முன்னிலை வகித்தார். மாவட்ட ஊராட்சி செயலாளர் ராஜி வரவேற்றார். கூட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் செலவினங்களுக்கு ஒப்புதல் அளித்து 29 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அத்துடன் இந்த கூட்டத்தில் துணைத்தலைவர் ராஜபாண்டியன் கூறுகையில், "மதுரையில் இருந்து தேனிக்கு 11 ஆண்டுகளுக்கு பிறகு ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு நிதி ஒதுக்கீடு செய்து ரெயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திரமோடிக்கும், இந்த திட்டத்துக்கு முயற்சிகள் எடுத்த முன்னாள் ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல், தற்போதைய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஸ்ணவ், தேனி எம்.பி. ப.ரவீந்திரநாத் ஆகியோருக்கும், தொடக்க விழாவில் பங்கேற்ற தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்" என்றார். இதையடுத்து அவர் முன்மொழிந்த தீர்மானம் கவுன்சிலர்களின் ஒருமித்த ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்