நீரில் மூழ்கிய தொழிலாளி பிணமாக மீட்பு
வாணியம்பாடி பாலாற்றில் நீரில் மூழ்கிய தொழிலாளி பிணமாக மீட்கப்பட்டார்.
வாணியம்பாடி ராமையன்தோப்பு பகுதியில் உள்ள பாலாற்றின் கிளை ஆற்றில், நூருல்லா பேட்டை பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி நூர் (வயது 30) என்பவர் நேற்று முன்தினம் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது திடீரென ஆழமான பகுதிக்கு சென்றவர் நீரில் மூழ்கி விட்டார். மீண்டும் வெளியில் வரவில்லை. இதனை அப்பகுதியில் இருந்தவர்கள் பார்த்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அதன்பேரில் அங்கு வந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் பொதுமக்கள் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். நேரம் இருட்டிவிட்டதால் தேடும் பணி கைவிடப்பட்டது.
இந்த நிலையில் 2-வது நாளாக நேற்று காலையில் மீண்டும் தேடுதல் பமி நடந்தது. அப்போது அவர் பிணமாக மீட்கப்பட்டார். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து வாணியம்பாடி டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.