காயத்துடன் தவித்த புள்ளிமான் மீட்பு

காயத்துடன் தவித்த புள்ளிமான் மீட்பு

Update: 2022-12-12 18:45 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே ஆ.சங்கம்பாளையத்தில் காயத்துடன் புள்ளி மான் ஒன்று படுத்து கிடந்தது. இதை அறிந்து வந்த பொள்ளாச்சி வனத்துறையினர் மானை மீட்டு அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். கால் மற்றும் முகத்தில் காயங்கள் இருந்ததால் மானுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், காட்டில் இருந்து வழி தவறி மான் வந்திருக்கலாம். நாய்கள் துரத்தியதால் கீழே விழுந்து கால், முகத்தில் காயம் ஏற்பட்டு இருக்க கூடும். மானை மீட்டு உரிய சிகிச்சை அளித்த பிறகு எழுந்து நடக்க தொடங்கியது. மானின் உடல்நிலை நல்ல நிலையில் இருப்பதால் சர்க்கார்பதி வனப்பகுதியில் பத்திரமாக கொண்டு சென்று விடப்பட்டது என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்