வீட்டில் 3 குட்டிகளுடன் இருந்த மரநாய் மீட்பு

செங்கோட்டை அருகே வீட்டில் 3 குட்டிகளுடன் இருந்த மரநாய் மீட்கப்பட்டது.

Update: 2022-10-11 19:12 GMT

செங்கோட்டை:

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள புளியரை கீழப்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் முனியசாமி. இவருடைய மனைவி லட்சுமி. நேற்று இவர்களது வீட்டில் உள்ள பீரோவை வேறு இடத்தில் மாற்றி வைப்பதற்காக அகற்றி உள்ளனர். அப்போது பீரோவின் மேல் பகுதி அறையில் மரநாய் ஒன்று 3 குட்டிகள் போட்டு இருப்பது தெரியவந்தது. இதை பார்த்து லட்சுமி அதிர்ச்சி அடைந்து அலறினார்.

இதுகுறித்து உடனடியாக செங்கோட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே நிலைய அலுவலர் சிவசங்கரன் தலைமையில் சிறப்பு அலுவலர் செல்வன் உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, பீரோவில் இருந்த மரநாயையும், குட்டிகளையும் பத்திரமாக மீட்டு செங்கோட்டை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் அவற்றை வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்