கிணற்றில் தவறி விழுந்த கன்றுக்குட்டி உயிருடன் மீட்பு
கிணற்றில் தவறி விழுந்த கன்றுக்குட்டி உயிருடன் மீட்க்கப்பட்டது.
கறம்பக்குடி:
கறம்பக்குடி அருகே உள்ள வெள்ளாள கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் பாரதி. விவசாயி. இவருக்கு சொந்தமான கன்றுக்குட்டி அவரது தோட்டத்தில் உள்ள 40 அடி ஆழ கிணற்றில் விழுந்து விட்டது. இதுகுறித்து பாரதி கறம்பக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் நிலைய அதிகாரி குழந்தைராசு தலைமையில் அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் கயிற்றின் மூலம் கிணற்றில் இறங்கி கன்றுக்குட்டியை உயிருடன் மீட்டனர்.