சூடானில் மீட்கப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மதுரை வந்தனர்

சூடானில் இருந்து மீட்கப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மதுரை வந்தனர். அந்நாட்டு நிலவரம் குறித்து அவர்கள் உருக்கத்துடன் கூறினர்.

Update: 2023-04-27 18:45 GMT

சூடானில் இருந்து மீட்கப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மதுரை வந்தனர். அந்நாட்டு நிலவரம் குறித்து அவர்கள் உருக்கத்துடன் கூறினர்.

சூடானில் உள்நாட்டு போர்

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்நாட்டு போராக மாறி உள்ளது. இதனால் அங்கு வசித்து வரும் வெளிநாட்டினரை அந்தந்த நாடுகள் மீட்டு வருகின்றன. இதற்காக சிறப்பு விமானங்களையும் இயக்குகின்றன.

'ஆபரேஷன் காவேரி' என்ற திட்டத்தின் மூலம் சூடானில் சிக்கி உள்ள 4 ஆயிரம் இந்தியர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.

முதல்கட்டமாக சூடானில் இருந்து 36சூடானில் இருந்து மீட்கப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மதுரை வந்தனர். அந்நாட்டு நிலவரம் குறித்து அவர்கள் உருக்கத்துடன் கூறினர்.0 இந்தியர்களை போர் விமானம் மூலம் மீட்டனர். அதில் தமிழகத்தை சேர்ந்த 9 பேரும் அடங்குவர். அவர்கள் டெல்லியில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

4 பேர் மதுரை வந்தனர்

சென்னை வந்த 9 பேரில் ஒரே குடும்பத்தினர் 4 பேரும் உள்ளனர். இவர்கள் நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்தவர்கள். இதில் ஜோன்ஸ் திரவியம், அவருடைய மனைவி சேத்ருத் ஷீபா, மகள்கள் ஜென்சி ஜோன்ஸ், ஜோஸ்னா ஜோன்ஸ் ஆவர். அவர்கள் 4 பேரும் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று காலை 9 மணி அளவில் மதுரை வந்தடைந்தனர்.

விமான நிலையத்தில் அளித்த பேட்டியில், சூடானில் உள்ள நிலவரம் குறித்து ஜோன்ஸ் திரவியம் கூறியதாவது:-

சூடானில் ராணுவத்திற்கும், துணை ராணுவத்தினருக்கும் நடைபெறும் உள்நாட்டு போரில் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். அங்கு 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசிக்கின்றனர். காட்டூன் பகுதியில் இந்தியர்கள் அதிகமாக உள்ளனர். உள்நாட்டு போரினால் கடந்த 10 நாட்களாக அங்கு மின்சாரம், குடிநீர் கிடையாது. பெரும்பாலான இடங்களை துணை ராணுவம் கைப்பற்றியுள்ளது.

இந்திய தூதரக ஏற்பாட்டின்படி, மத்திய அரசின் நடவடிக்கையால் முதல் கட்டமாக 360 பேர் மீட்கப்பட்டனர். அங்கு முக்கிய உடைமைகளை தவிர மற்ற பொருட்கள் எதையும் எடுத்துவர அனுமதியில்லை. தலைநகர் காட்டூனிலிருந்து, மற்றொரு முக்கிய நகரான ஜெட்டா வரை பஸ்சில் வந்து அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி வந்தோம்.

உதவி வேண்டும்

15 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு ஆசிரியர் பணிக்கு சென்றேன். இப்போது ஒரு பள்ளியில் இயக்குனராக பணிபுரிகிறேன்.

எனது மூத்த மகள் ஜென்சி ஜோன்ஸ் மருத்துவம் 3-ம் ஆண்டும், 2-வது மகள் ஜோஸ்னா ஜோன்ஸ் மருத்துவம் 2-ம் ஆண்டு படித்து வந்தனர். இப்போது அவர்களது கல்வி தடைபட்டுள்ளது.

அங்குள்ள கல்வி முறை வேறு. இங்குள்ள கல்வி முறை வேறு. என் மகள்கள் படிப்பை தொடர தமிழக முதல்-அமைச்சர் உதவி செய்ய வேண்டும். எங்களது உடைமைகளை பெரும்பாலானவற்றை எடுக்காமல் வந்துவி்ட்டதால், என்ன செய்வது என்றே தெரியவில்லை. மிகுந்த மனவருத்தத்தில் உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் 4 பேரும், உறவினர்களை சந்திக்க திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டிக்கு புறப்பட்டு சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்