செட்டிகுளம் பஸ் நிலையத்தில் பாலூட்டும் அறை அமைக்க கோரிக்கை
செட்டிகுளம் பஸ் நிலையத்தில் பாலூட்டும் அறை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளம் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பெண்கள், தாய்மார்கள், முதியவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என பலர் செட்டிகுளம் பஸ் நிலையத்திற்கு வந்து அங்கிருந்து பஸ் ஏறி வெளியூர் சென்று வருகின்றனர். இந்த நிலையில் செட்டிகுளம் பஸ் நிலையத்தில் பாலூட்டும் தாய்மார்கள் அறை அமைக்கப்படாமல் உள்ளதால் தாய்மார்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.