சாலையை சீரமைக்க கோரிக்கை

சாலையை சீரமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-05-18 19:12 GMT

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் பாளையம்பட்டியில் பி.பி.வி. சாலா பள்ளி எதிரே இருந்து நான்கு வழிச்சாலைக்கு செல்லும் சாலை சேதமடைந்து, சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இப்பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த சாலையை கடந்து தான் கிழக்குத்தெருவிற்கும், சந்திவீர சுவாமி கோவிலுக்கும் செல்கின்றனர். இந்தப் பாதையை தினமும் ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். சேறும், சகதியுமாக கிடக்கும் சாலையால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் மோட்டார் சைக்கிளில் செல்வோர் கீழே விழுந்து விபத்து ஏற்படுகிறது. எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்