இளையான்குடி
இளையான்குடி அருகே உள்ள சாணாரேந்தல் கிராமத்திற்கு தாயமங்கலம் விலக்கு ரோட்டில் இருந்து செல்லும் சாலை சாணாரேந்தல் கிராமத்திற்குள் சென்று காரைக்குளம் செல்லும் மெயின் ரோட்டில் இணைகிறது. தார் சாலையாக போடப்பட்ட சாலை தற்பொழுது களிமண் சாலையாக மாறி பொதுமக்கள் பயணம் செல்லும்போது வாகனங்கள் விபத்திற்கு உள்ளாகின்றன. இதனால் பள்ளி செல்லும் வாகனங்களும் இருசக்கர வாகனங்களும் மழைக்காலங்களில் விபத்துக்குள்ளாகின்றன. சமீபத்தில் பள்ளிக்குச் சென்ற வேன் களிமண்ணால் இழுத்துச் செல்லப்பட்டு விபத்தும் நேரிட்டுள்ளது. இச்சாலையை முற்றிலும் சீரமைத்து சாலையில் கண்மாய் கரையிலிருந்து மழைக்காலங்களில் களிமண் கரைந்து மூடுவதால் போக்குவரத்துக்கு மிகுந்த இடையூறு ஏற்படுகிறது. இச்சாலையை மேம்படுத்தி புதிய தார்சாலையும், கண்மாய் கரையில் களிமண் கரைந்து வருவதை தடுத்து தடுப்புச் சுவர் ஏற்படுத்தித் தரவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நெடுஞ்சாலை துறையினர் இச்சாலையை சீரமைத்து தடுப்புச் சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.