போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மரத்தை அகற்ற கோரிக்கை

போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மரத்தை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டது.

Update: 2023-04-03 19:34 GMT

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை திருப்பத்தில் புளிய மரம் ஒன்று உள்ளது. இந்த பகுதியில் அரசு மருத்துவமனை, பள்ளிகள், கல்லூரி உள்ளிட்டவை உள்ளன. மேலும் கும்பகோணம் செல்வதற்கு இந்த பகுதியில் உள்ள சாலையைத்தான் அனைத்து வாகன ஓட்டிகளும் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இந்த பகுதியில் வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளது. இந்நிலையில் போக்குவரத்துக்கு இடையூறாக மருத்துவமனை திருப்பத்தில் உள்ள புளிய மரத்தால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. அதில் காயமடைந்தவர்கள் மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்ற சம்பவமும் நடந்துள்ளது. குறிப்பாக 108 ஆம்புலன்சுகள் இந்த வழியாகவே மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். அந்த நேரத்தில் ஒரு ஆம்புலன்ஸ் மரத்தின் அருகே வரும்போது, அதற்கு மற்ற வாகனங்கள் வழிவிட இடமில்லாத நிலை ஏற்படுகிறது. எனவே போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள இந்த புளிய மரத்தை அகற்ற வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்