விரிசல் ஏற்பட்டுள்ள அரசமர கிளையை அகற்ற கோரிக்கை
விரிசல் ஏற்பட்டுள்ள அரசமர கிளையை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜீயபுரம் அருகில் உள்ள குழுமணி வாரச்சந்தை அருகில் உள்ள பிள்ளையார் கோவில் அருகில் சுமார் நூறு ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த அரசமரம் உள்ளது. இந்த மரத்தின் ஒரு பகுதியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த மரம் இருக்கும் சாலையானது குழுமணி- ஜீயபுரம் செல்லும் மிக முக்கியமான சாலையாகும். எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மரம் முறிந்து விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து விரிசல் ஏற்பட்டுள்ள கிளையை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.