பில்லங்குளம், பெருநிலா ஏரிக்கரையின் இருபுறங்களிலும் சீமைக்கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை

பில்லங்குளம், பெருநிலா ஏரிக்கரையின் இருபுறங்களிலும் சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என ஏரிப்பாசன விவசாயிகள் சங்க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.;

Update:2023-10-26 00:32 IST

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பில்லங்குளம் கிராமத்தில் ஏரிப்பாசன விவசாயிகள் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க தலைவர் தங்கராசு தலைமை தாங்கினார். மருதையாறு வடிநில உபகோட்ட இளநிலை பொறியாளர் தங்கையன், ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி உள்பட பலர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பில்லங்குளம், பெருநிலா மற்றும் கை.களத்தூர் ஏரிகளுக்கு வனப்பகுதிகளில் இருந்து வரும் நீர் வரத்து வாய்க்காலை சீர் செய்ய ஒத்துழைப்பு நல்கிய மாவட்ட நிர்வாகத்திற்கும், ஏரியின் கரை பகுதிகளில் பனை விதை ஊன்ற ஒத்துழைத்த பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வது. பில்லங்குளம் மற்றும் பெருநிலா ஏரிக்கரையின் இருபுறங்களிலும் சீமைக்கருவேல மரங்களை அகற்ற அனுமதி வழங்க வேண்டும். பில்லங்குளம் சின்னேரியில் இருந்து வெளிவரும் உபரி நீர் வாய்க்கால் வழியாக பெருநிலா எரிக்கும், அருகே உள்ள நிலங்களுக்கும் செல்வதால் வாய்க்காலை அகலப்படுத்தி தூர்வாரி தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் ஏரி பாசன விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர். முன்னதாக ஆட்சி மன்ற உறுப்பினர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். முடிவில் கள ஒருங்கிணைப்பாளர் அம்பிகாபதி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்