மின் இணைப்பு வழங்க கோரிக்கை
மின் இணைப்பு வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை ஒன்றியம் ஏழாயிரம் பண்ணை அருகே உள்ள பனையடிப்பட்டி ஊராட்சியை சேர்ந்த காலனியில் 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்காததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். தற்போது தேர்வு நடைபெறுவதால் மாணவர்கள் படிக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். ஆதலால் மேற்கண்ட பகுதிக்கு மின்இணைப்பு வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.