காவல்துறை ஓய்வூதியர்களுக்கு அரியர் வழங்க கோரிக்கை
காவல்துறை ஓய்வூதியர்களுக்கு அரியர் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் மாவட்ட காவல்துறை ஓய்வூதியர்கள் நலச்சங்க கூட்டம் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் மாநில துணைத்தலைவர் கந்தசாமி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் சாமுவேல் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் 21 மாத கால டி.ஏ. மற்றும் அரியர் வழங்க வேண்டும், மத்திய அரசு 4 சதவீதம் டி.ஏ. உயர்வு வழங்கியுள்ளதுபோல் தமிழக அரசும் வழங்க வேண்டும், பஸ்களில் பயணம் செய்ய இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், காவல்துறை ஓய்வூதியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.