ஓய்வூதியர்களுக்கு மருத்துவ படியை உயர்த்தி வழங்க வேண்டுகோள்

ஓய்வூதியர்களுக்கு மருத்துவ படியை உயர்த்தி வழங்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

Update: 2022-11-03 18:56 GMT

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தின் மாதாந்திர கூட்டம் பெரம்பலூரில் நடந்தது. இதற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் முத்துசாமி தலைமை தாங்கினார். சங்கத்தின் தலைமை நிலைய செயலாளர் மணி வரவேற்றார். மாவட்ட செயலாளர் மருதமுத்து சங்க கூட்ட அறிக்கையை வாசித்தார். பொருளாளர் ஆதிசிவம் வரவு-செலவு, இருப்பு அறிக்கையை வாசித்தார். கூட்டத்தில் மத்திய அரசு வழங்கியுள்ள 38 சதவீத அகவிலைப்படியை நிலுவையின்றி, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் அறிவித்தது போல், தமிழக அரசும் அகவிலைப்படியை உரிய தேதியில் நிலுவையின்றி உயர்த்தி வழங்கிட வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரியையும், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிட பணிகளை விரைந்து தொடங்க வேண்டும். 70 வயது முடிந்த ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு 10 சதவீத கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசு ஊழியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு, விடுப்பு கால பயணச்செலவு சலுகையை மீண்டும் அளிக்க வேண்டும். கருவூல கணக்குத்துறை அலுவலர்களின் இடமாற்றத்தை விதிமீறல் இல்லாமல் முறைப்படுத்த வேண்டும். ஓய்வூதியர்களுக்கு மருத்துவ படியை ரூ.ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்