முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டுகோள்

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டுகோள்

Update: 2023-01-08 18:59 GMT

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சமுதாய பொதுக்கூட்டம் பெரம்பலூரில் நடைபெற்றது. இதற்கு அமைப்பின் மாவட்ட தலைவர் அப்துல் நாசர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 3.5 சதவீத இடஒதுக்கீட்டை அரசு 7 சதவீதமாக அதிகரித்து முஸ்லிம்களுக்கு அளிக்க வேண்டும். புதுக்கோட்டை மாவட்டம் இறையூரில் ஆதிதிராவிடர் வாழும் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் அசுத்தம் செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை வழங்க வேண்டும். சாதிய சக்திகளை கூர்மைப்படுத்தும் பாசிசவாதிகளுக்கு எதிராக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்