விடுதியில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டுகோள்

விடுதியில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2022-12-24 18:58 GMT

பெரம்பலூரில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை விடுதி பணியாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் பெரியசாமி தலைமை தாங்கினார். சங்கத்தின் நிறுவன தலைவர் தங்கவேல், மாநில தலைவர் காமராஜ், ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தின் மாவட்ட கவுரவ தலைவர் ஞானசேகரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். பெரம்பலூர் மாவட்டத்திற்கு உடனடியாக மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலரை நியமனம் செய்ய வேண்டும். விடுதியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும். விடுதிக்கு 2 சமையலர்களை நியமிக்க வேண்டும். இரவு நேர காவலர் இல்லாத விடுதிகளில் மாணவர்களின் நலன் கருதி இரவு நேர காவலரை நியமனம் செய்ய வேண்டும். பெரம்பலூர் மாவட்ட விடுதி சமையலர், காவலர், ஏவலர்கள் மட்டும் அடிப்படை பணியாளர்கள் அல்ல என்று சிறப்பு ஈடு செய்யும் தொகை (எஸ்.சி.ஏ.) வழங்கப்படாமல் உள்ளது. எனவே ஆதிதிராவிடர் நல இயக்குனர் பெரம்பலூரில் நிறுத்தம் செய்யப்பட்ட அந்த தொகையை வழங்க ஆணை வழங்க வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் விடுதி துப்புரவு பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்