ஊரணியை சுற்றி வேலி அமைக்க கோரிக்கை

ஊரணியை சுற்றி வேலி அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2023-03-27 19:15 GMT

காரையூர்:

பொன்னமராவதி ஒன்றியம், காரையூர் மறவர் குடியிருப்பு அருகே மறவர் ஊரணி உள்ளது. சுமார் 100 ஆண்டுகள் பழமையான இந்த ஊரணியில் உள்ள தண்ணீரை அப்பகுதி மக்கள் குடிநீராக பயன்படுத்துகின்றனர். இந்த ஊரணியில் உள்ளூர் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளான கொன்னையம்பட்டி, காடம்பட்டி, பாறைக்களம், மேட்டுப்பட்டி, காரையூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் குடங்களில் தண்ணீர் எடுத்து இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களிலும், தலையில் சுமந்தும் கொண்டு செல்கின்றனர்.

மேலும் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கும் இந்த ஊரணியில் இருந்து தண்ணீர் எடுத்து குடிநீருக்காக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த ஊரணி காரையூர்-சடையம்பட்டி செல்லும் சாலை ஓரமாக அமைந்துள்ளதால் சாலையில் செல்லும் வெளியூர் பயணிகள், அந்த ஊரணி நீரை அசுத்தம் செய்து வருகின்றனர். மேலும் ஊரணியில் ஆடு, மாடுகளும் சென்று அசுத்தம் செய்கின்றன. இதனால் அப்பகுதி மக்கள், ஊரணி நீரை குடிநீராக பயன்படுத்துவதற்கு தயங்குகின்றனர். எனவே அசுத்தம் செய்யப்படுவதை தடுக்க, இந்த ஊரணியை சுற்றி கம்பி வேலி அமைத்து குடிநீரை பாதுகாக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்