உடைந்து கிடக்கும் இருக்கைகளை சீரமைக்க கோரிக்கை

பஸ்நிலையத்தில் உடைந்து கிடக்கும் இருக்கைகளை சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2023-06-11 18:30 GMT

அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி ஜங்ஷன் பகுதியில் முட்டுவாஞ்சேரி செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகளின் வசதிக்காக இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இரவு நேரத்தில் மது பிரியர்கள் மது போதையில் இந்த இருக்கையை அடித்து உடைத்துள்ளனர். தற்போது இருக்கைகள் உடைந்து கிடப்பதால் பயணிகள் உட்கார இருக்கைகள் இன்றி பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்