போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள விளம்பர பதாகைகளை அகற்ற கோரிக்கை

போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள விளம்பர பதாகைகளை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2023-01-10 19:38 GMT

பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானா பகுதியில் ஆங்காங்கே போக்குவரத்துக்கு இடையூறாக விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. இதனை அதிகாரிகளும், போலீசாரும், போக்குவரத்து போலீசாரும் கண்டும், காணாதது போல் சென்று விடுகின்றனர். பெரம்பலூர் புதிய பஸ் நிலைய பகுதியில் இருந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு அப்பகுதியில் உள்ள விளம்பர பதாகையால், பாலக்கரை ரவுண்டானா பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் தெரிவதில்லை. இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் பெரம்பலூர் நகர்ப்பகுதியில் ஆங்காங்கே போக்குவரத்துக்கு இடையூறாக விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்துக்கு இடையூறாகவும், அனுமதியின்றியும் வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்