தற்காலிக பணியாளர்களை நியமிக்க கோரிக்கை

டெங்கு ஒழிப்பு பணிக்கு தற்காலிக பணியாளர்களை நியமிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2023-02-15 20:08 GMT

சிவகாசி, 

சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் டெங்கு ஒழிப்பு பணியில் 60 பெண்கள் தனியார் ஒப்பந்த பணியாளர்களாக தற்காலிகமாக பணியாற்றி வந்தனர். இந்தநிலையில் இவர்களின் பணிக்காலம் முடிந்த நிலையில் அவர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இந்தநிலையில் இந்த பணியில் ஈடுபட்டுவந்தவர்கள் சிவகாசி மாநகர தி.மு.க. செயலாளர் உதயசூரியனை நேரில் சந்தித்து தங்களுக்கு பணிநீட்டிப்பு செய்து தர உதவி செய்யும்படி கேட்டுக்கொண்டனர். அப்போது அவர் இதுகுறித்து மேயர் சங்கீதா இன்பம் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

இதனை தொடர்ந்து சிவகாசி மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் சங்கீதா இன்பத்தை நேரில் சந்தித்து டெங்கு ஒழிப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு மீண்டும் பணி வழங்கி சுகாதார சீர் கேடு ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். இதனை தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுத்து சிவகாசி மாநகராட்சி பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் சங்கீதா இன்பம் உறுதி அளித்தார். அப்போது தி.மு.க. நிர்வாகிகள் இன்பம், மாரீஸ்வரன், ராஜேஷ், கார்த்தி, செந்தில் உள்பட பலர் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்